×

ரத்தம் சிந்தி பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை ஒன்றிய பாஜ அரசின் 10 ஆண்டு கால ஆட்சி சிதைத்து விட்டது: மே தின பூங்காவில் மரியாதை செலுத்திய பின் செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: மே தினத்தை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தி­ன பூங்­கா­வில் உள்ள நினை­வுச் சின்­னத்­துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் காங்கிரசார் ஏராளமானோர் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, செல்வப் பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: தொழிலாளர் உரிமைகளுக்காக குரல் கொடுத்த தலைவர்களுக்கும் இந்த உரிமையை மீட்டெடுத்த தலைவர் பெருமக்களுக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை என்பது நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உரிமை நலன், காப்புரிமை, எதிர்காலம் என அனைத்தையும் காங்கிரஸ் கொடுத்தது.

ஒன்றிய பாஜ மோடி ஆட்சியில் தொழிலாளர்களின் நலன் புறந்தள்ளப்பட்டுள்ளது. 50 கோடி மக்களுக்கு மேல் அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளனர். இந்த 50 கோடி தொழிலாளர்களுக்கும் மோடி ஆட்சியில் பெரும் 176 ரூபாய் சம்பளம், இந்த சம்பளத்தை வைத்துக் கொண்டு ஒருவர் எப்படி குடும்பத்தை நடத்த முடியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் 176 ரூபாய் சம்பளம் 400 ரூபாயாக உயர்த்தப்படும். தொழிலாளர்களுக்கு வேலை உறுதி செய்யப்படும், தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் உறுதி செய்யப்படும் அவர்களுக்கு உரிய எதிர்க்கலாம் அமைத்து தரப்படும். இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்று கூறிய மோடி இருந்த வேலை வாய்ப்பையும் பறித்துக் கொண்டார். சிகாகோவில் நடந்த போராட்டத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டது.

பல ரத்த சிந்தலுக்குப் பிறகு தொழிலாளர்கள் உரிமைகள் பெறப்பட்டது. அந்த உரிமைகளை பத்தாண்டு கால பாஜக ஆட்சி சிதைத்து விட்டது. இந்தியாவில் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எதற்காக தொழிலாளர்கள் உரிமையை மீட்டெடுக்கப்பட்டதோ, அதற்கு உண்மையான அர்த்தத்தை ஜூன் 4தேதிக்கு பிறகு இந்தியா கூட்டணி அமல்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் முகப்பில் நீர்மோர் பந்தலை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திறந்து வைத்து, பழங்கள், மோர் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, பொருளாளர் ரூபி மனோகரன், துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ரத்தம் சிந்தி பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை ஒன்றிய பாஜ அரசின் 10 ஆண்டு கால ஆட்சி சிதைத்து விட்டது: மே தின பூங்காவில் மரியாதை செலுத்திய பின் செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union BJP ,Selvaperunthakai ,May Day Park ,Chennai ,May Day ,Tamil Nadu ,Congress ,President ,Selva Perundagai ,Chintadirippet, Chennai ,Union BJP government ,
× RELATED தமிழர்கள் பற்றி அவதூறாக பேசிய...